இந்தியாவில் 6500 திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம்

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் டிரைலரில் மட்டுமின்றி ரிலீசிலும் 'பாகுபலி 2' சாதனை செய்யவுள்ளது. வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படம் இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் இந்தியாவில் எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி ரிலீசுக்கு முன்னரே இந்த படம் ரூ.500 கோடி வியாபாரம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் வட அமெரிக்காவில் 750 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த படத்தை பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் எந்தெந்த நாடுகளில் எத்தனை திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகின்றது என்பது குறித்த செய்திகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'அட்ஜெஸ்ட்மெண்ட்' குறித்து நடிகை லேகா வாஷிங்டனின் அனுபவம்

'ஜெயம்கொண்டான்', உன்னாலே உன்னாலே', கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன். சமீப காலமாக உலவி வரும் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து தனது அனுபவங்களை பிரபல இதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்...

'விவேகம்' படப்பிடிப்பில் காஜல் இணைவது எப்போது?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் உலக தரத்தில் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பின் இரண்டு ஸ்டில்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது தெரிந்ததே...

வாழைப்பழ வடிவில் கேக். வித்தியாசமாக கொண்டாடப்பட்ட செந்தில் பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து காமெடி செய்து அந்த காமெடி ஒரு தலைமுறைக்கும் மேல் தொடர்ந்து மக்களை சிரிக்க வைத்து கொண்டிருப்பது என்றால் அது கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிதான். இன்று கூட தொலைக்காட்சியில் இந்த காமெடி ஒளிபரப்பப்பட்டால் குடும்பத்தோடு சிரித்து மகிழ்வது உண

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார். அவருக்கு வயது 85...

சசிகலா அதிமுகவில் இருந்து விலகிய பிரபல நகைச்சுவை நடிகை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்த பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அதிமுகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் ஒன்றை டிடிவி தினகரனுக்கு அனுப்பியுள்ளார். எனக்கு திரையில் மட்டுமே நடிக்க தெரியும் என்றும் அரசியலில் நடிக்க தெரியாததால் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும