இதற்குத்தான் நடிக்கவே வந்தேன்… மேடையில் உருக்கமாகப் பேசிய நடிகர் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Tuesday,October 05 2021]

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவைத் தவிர தற்போது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கூடவே வில்லன் கதாபாத்திரம், இரண்டாவது ஹீரோ என எதுவானாலும் அசால்ட்டாக ஏற்று நடிக்கக்கூடியவர். தற்போது சினிமாவைத் தவிர வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று அனைத்து பரிமாணத்திலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி மேடையில் பேசிய உருக்கமான கருத்து ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அண்மையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி ரூபாய் ஒரு கோடி நதியுதவி வழங்கினார்.

இதற்கான விழா மேடையில் நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய அப்பா வைத்திருந்த ரூ.10 லட்சம் கடனுக்காகவே நடிக்க வந்ததாகத் தெரிவித்தார். மேலும் துபாயில் தான் வேலையில் இருந்தபோது சம்பாதித்து அனுப்பிய பணம் வட்டிக்கட்டவே சரியாக இருந்ததாகவும் கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் ஒரு சமானியனுக்கு சொந்த வீடு என்பது பல நேரங்களில் கனவாகவே இருக்கும். அதுவும் வாடகை வீட்டில் வாழ்வது அதைவிட கொடுமையான விஷயம். சொந்த வீடு வாங்கவேண்டும் என்று தனக்கு மிகப்பெரிய கனவு இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்தப் பேச்சுத்தான் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் பவானிரெட்டியின் சோகமான மறுபக்கம்!

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் நேற்றைய தினம் முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு இருந்தனர்

கலைஞர்கள் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது: பாடகிக்கு டிஸ்லைக் போட்ட ராஜூ ஜெயமோகன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை மனம்விட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.

2021-க்கான நோபல் பரிசு… மருத்துவத் துறைக்கான அறிவிப்பு!

நடப்பு(2021) ஆண்டிற்கான நோபல் பரிசு இன்று முதல் வரும் 11 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக் முடக்கம்… கோடிக் கணக்கில் சரிவை சந்தித்த மார்க் சக்கர்பெர்க்!

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம்

பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் காதல் கதை: இத்தனை வருட லவ்வா?

பிக்பாஸ் சீசன் 5 நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.