இதற்குத்தான் நடிக்கவே வந்தேன்… மேடையில் உருக்கமாகப் பேசிய நடிகர் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Tuesday,October 05 2021]

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவைத் தவிர தற்போது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கூடவே வில்லன் கதாபாத்திரம், இரண்டாவது ஹீரோ என எதுவானாலும் அசால்ட்டாக ஏற்று நடிக்கக்கூடியவர். தற்போது சினிமாவைத் தவிர வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று அனைத்து பரிமாணத்திலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி மேடையில் பேசிய உருக்கமான கருத்து ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அண்மையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி ரூபாய் ஒரு கோடி நதியுதவி வழங்கினார்.

இதற்கான விழா மேடையில் நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய அப்பா வைத்திருந்த ரூ.10 லட்சம் கடனுக்காகவே நடிக்க வந்ததாகத் தெரிவித்தார். மேலும் துபாயில் தான் வேலையில் இருந்தபோது சம்பாதித்து அனுப்பிய பணம் வட்டிக்கட்டவே சரியாக இருந்ததாகவும் கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் ஒரு சமானியனுக்கு சொந்த வீடு என்பது பல நேரங்களில் கனவாகவே இருக்கும். அதுவும் வாடகை வீட்டில் வாழ்வது அதைவிட கொடுமையான விஷயம். சொந்த வீடு வாங்கவேண்டும் என்று தனக்கு மிகப்பெரிய கனவு இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்தப் பேச்சுத்தான் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.