'யானை' ரிலீஸ் ஒத்திவைப்புக்கு கமல் தான் காரணம்: தயாரிப்பு நிறுவனம் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ’யானை’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்து, இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்புக்கு கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் தான் காரணம் என அறிவித்துள்ளது
‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மேல் வைத்துள்ள மரியாதை காரணமாக நாங்கள் ’யானை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றி உள்ளோம் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் நிறுவனம் அறிவித்துள்ளது
மேலும் கமல்ஹாசனை நேரில் சந்தித்த இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பதும், இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
With all due respect to #Vikram we are postponing our #Yaanai worldwide release to July 1st
— Drumsticks Productions (@DrumsticksProd) June 13, 2022
Wishing @ikamalhaasan sir @Dir_Lokesh and @RKFI for the record breaking success - Team Yaanai.#YaanaiFromJuly1st@arunvijayno1 #DirectorHari @priya_Bshankar @gvprakash @ZeeTamil pic.twitter.com/87vyF5KuDo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments