யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக முதல் புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் போட்டியாளர்கள் நாமினேட் செய்வதற்கான காரணத்தை சக போட்டியாளர்கள் கூறியதை பிக்பாஸ் கடந்த சில வாரங்களாக வெட்டவெளிச்சமாக கூறி வருகிறார்

அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் செய்தற்கான காரணங்களாக போட்டியாளர்கள் கூறியது இது தான்: எல்லாரையும் தப்பா புரிஞ்சிகிறாரு, வீட்டோட அமைதியை கெடுக்குறாங்க, சிரிச்சுகிட்டே பேசி ஹர்ட் பண்றாங்க, பாலாவோட ஷேடோவுல தான் இருக்காங்க போன்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளது

தன்னை நாமினேட் செய்ததற்கான காரணங்கள் குறித்து ஷிவானி கூறிய போது, ‘யோவ் என்னை நானே செய்யறதுக்கு வேற காரணமே இல்லையா என்று புலம்புகிறார். அதேபோல் ஷிவானிக்கு கூறிய காரணம் குறித்து பாலாஜி கூறுகையில் ’இது ரொம்ப தப்பா இருக்கு என்று கூறுகிறார்

மேலும் ஆஜித்திடம் பாலாஜி, ‘உன்னைவிட இந்த வாரம் வெளியே போவதற்கு யாருக்கு அதிகமாக சான்ஸ் இருக்கு? என்று கேட்டபோது, ஆஜித், ‘என்னை விட அதிகமாக வெளியே போவதற்கு எனக்கு தெரிஞ்சு யாருக்குமே சான்ஸ் இல்லை’ என்று கூறுகிறார்