தமிழ்ல படம் பண்ணாததுக்கு காரணமே இதுதான் - நடிகர் அவினாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
எலந்தூர் நாராயண் ரவீந்திரா என்ற இயற்பெயர் உடையவர். அவரது மேடைப் பெயரான அவினாஷ் என்ற பெயரால் தென்னிந்திய திரைத்துறையில் நன்கு அறியப்பட்டவர், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் பல்வேறு முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
பிரபல குணச்சித்திர நடிகை , மாளவிகாவின் கணவர் நடிகர் அவினாஷ் ஆவார்.
நடிகர் ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் ஏகன், பரமசிவம் மற்றும் வீரம், விஜயுடன் திருமலை, கார்த்திக்குடன் சிறுத்தை என தமிழ் திரைப்பட ஜாம்பவான்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனம் வென்றவர். கன்னட திரைப்பட உலகிலும் கோலோச்சி வருபவர்.
Indiaglitz நேயர்களுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.....
" நாசர் எனது நீண்ட கால நண்பர். சில வாரங்களுக்கு முன்னர் கூட அவர் கன்னட பட ஷூட்டிங்கில் இருந்தார். நான் இங்கு இருக்கிறேன் என்பதை தெரிந்து, என்னை வந்து சந்தித்தார்."
நடிகர் நெப்போலியன், அருண்பாண்டியன் மற்றும் சுமன் ஆகிவர்கள் எல்லாம் கன்னடத்தில் நிறைய படம் செய்துள்ளார்கள். அப்போது நிறையவே fight movies கன்னடத்தில் வெளிவரும்.
அஜித் ரொம்ப நல்ல மனிதர். என் மகன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவனுக்கு எதாவது மருத்துவ உதவி வேண்டுமா என்று எப்போதும் கேட்பார்.
என்னுடைய மனைவி மாளவிகா இப்போது அரசியலிலும் பிசியாகவுள்ளார். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். அவரோடு ஒரு சீரியலில் கணவனாக நடித்திருந்தேன் அங்கிருந்து தொடங்கியது எங்கள் காதல் வாழ்க்கை. இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.
இயக்குனர் சிவா, என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் படங்களில் நிச்சயம் நான் இருப்பேன். நான் நடிக்க இருக்க வேண்டும் என்பதற்காகவே வீரம் படத்தில் எனக்காக ஒரு காட்சி எழுதி படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டது.
என இந்த பேட்டியில் அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com