திருச்சி உஷாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்: நீதிபதியின் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரை விரட்டி சென்ற காவலர் ஒருவரின் மனிதநேயமற்ற செயலால், உஷாவின் உயிர் பரிதாபமாக பலியானது. உஷாவின் மரணத்திற்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உஷாவின் மரணத்திற்கு அவரது கணவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதே காரணம் என நீதிபதி கிருபாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே, அப்பாவி மக்கள் மீது கோபமாக மாறுவதாகவும், மனித உரிமை என்பது குற்றவாளிகளுக்கு மட்டுமின்றி காவலர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறிய நீதிபதி, பாதுகாப்புப் பணிக்கு செல்லும் காவலர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி நீண்ட நேரம் நிற்க வைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் எத்தனை காவலர்கள் வேலை பார்க்கின்றனர் என்றும், அதனை தடுப்பதற்காக 1979ல் கொண்டுவரப்பட்ட ஆர்டர்லி முறை ஒழிப்பு அரசாணை என்னவானது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுகுற்த்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் வரும் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இல்லையே அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை வரும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com