நிரூப்-அபிராமி பிரிந்ததற்கான காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கும் நிரூப் மற்றும் அபிராமி ஏற்கனவே காதலர்களாக இருந்த நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் காதலர்களான நிரூப் மற்றும் அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் இவர்களது காதல் குறித்தும், பிரேக் அப் குறித்தும் பல்வேறு மீம்ஸ்கள் பதிவாகி வந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் செலிபிரிட்டி வெர்சஸ் பிரஸ்மீட் என்ற டாஸ்க்கில் அபிராமி நிரூப்பிடம் கேள்வி எழுப்பிய போது, ‘ உங்களுடைய முன்னாள் காதலியை சந்தித்தபோது உங்களுடைய அந்த நிமிஷம் எப்படி இருக்கும்? என்று கேட்டார். அப்போது நிரூப், ‘அந்த முன்னாள் காதலியே நீங்கள்தான்’ என்று கூறியதும் சக போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ’உங்களை இங்கு முதலில் பார்த்தபோது நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. இனி வரப்போகும் நாட்களில் பேசலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
அதன்பின்னர் அபிராமி கூறிய போது, ‘என்னையும் உங்களையும் வைத்து பல்வேறு விதமான மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தான் இந்த கேள்வியை கேட்டேன் என்று கூறினார். அதற்கு நிரூப், ‘அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூலாக பதில் கூறினார்.
இந்த டாஸ்க் முடிந்தவுடன் நிரூப் மற்றும் அபிராமியுடன் தனித்தனியாக சக போட்டியாளர்கள் அவர்களது நட்பு மட்டும் காதல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அப்போது நிரூப், ‘ நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதான். ஆனால் அப்போது நான் பார்த்த அபிராமி இப்போது இல்லை, நிறைய மாறிவிட்டார். அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை’ என்றும், அவரிடம் நிறைய மாற்றம் தெரிந்ததால் தான் அவரை நாமினேட் செய்தேன் என்று கூறியிருந்தார் .
அதேபோல அபிராமி, ‘நாங்கள் இருவரும் டீசண்டாக பேசி தான் பிரிந்தோம் என்றும் எங்களைப் பற்றி பல்வேறு விதமான மீம்ஸ்கள் வந்து கொண்டிருப்பதால் அதை தெளிவு படுத்துவதற்காக தான் இந்த கேள்வியை கேட்டேன் என்றும் இதைப் பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments