நேற்று சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 189 ரன்கள் எடுத்த நிலையில் 18.4 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது என்பதும், டெல்லி அணியின் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா மிக அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே கிட்டத்தட்ட போட்டியை முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அணிக்கு மிகச் சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைத்து விட்டால் அந்த அணி வெற்றி பெறுவது உறுதி என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவதுண்டு.
அந்த வகையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் டுபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே நேற்று ஏமாற்றினார்கள் ருத்ராஜ் 5 ரன்களிலும் டுபிளஸ்சிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனதால் பவர் பிளே ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் போனதும், சென்னை அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே சரியான தொடக்க ஆட்ட ஜோடியை சிஎஸ்கே களமிறக்க வேண்டும்.
அதேபோல் கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் சென்னை அணி கூடுதலாக இன்னும் ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments