நேற்று சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 189 ரன்கள் எடுத்த நிலையில் 18.4 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது என்பதும், டெல்லி அணியின் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா மிக அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே கிட்டத்தட்ட போட்டியை முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அணிக்கு மிகச் சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைத்து விட்டால் அந்த அணி வெற்றி பெறுவது உறுதி என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவதுண்டு.

அந்த வகையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் டுபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே நேற்று ஏமாற்றினார்கள் ருத்ராஜ் 5 ரன்களிலும் டுபிளஸ்சிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனதால் பவர் பிளே ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் போனதும், சென்னை அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே சரியான தொடக்க ஆட்ட ஜோடியை சிஎஸ்கே களமிறக்க வேண்டும்.

அதேபோல் கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் சென்னை அணி கூடுதலாக இன்னும் ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

குஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்

நடிகை குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது? அலங்கோலமான போட்டோஷூட்!

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் ரசிகர்களின் மனதை தனது அருமையான நடிப்பின் மூலம் கவர்ந்தார் என்பதும் அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும்

லாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா?

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

நடப்பாண்டில் தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறனறி தேர்வு நடத்தவேண்டும் என்று  பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. 

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.