மீண்டும் ஒரு 'மறக்குமா நெஞ்சம்'? புத்திசாலித்தனமாக ரத்து செய்யப்பட்ட 'லியோ' இசை வெளியீட்டு விழா..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

‘லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் டிக்கெட் கொடுக்கப்பட்டது என்பதும் அதனால் மிகப்பெரிய அளவில் பிரச்சனை எழுந்தது என்பதையும் பார்த்தோம்.

அந்த வகையில் ‘லியோ’ ஆடியோ இசை வெளியீட்டு விழாவிற்கும் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஒருசிலர் போலி டிக்கெட்டுகளை ஏராளமாக அச்சடித்ததாக தெரிகிறது. 6000 பேர் மட்டுமே அமரக்கூடிய அரங்கத்தில் 25,000க்கும் அதிகமான போலி டிக்கெட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இருந்த தகவல் தெரிந்த உடன்தான் தயாரிப்பாளர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் மீண்டும் ஒரு ’மறக்கமா நெஞ்சம்’ போன்ற கசப்பான அனுபவத்தை தடுக்கும் வகையில் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.