மீண்டும் கொல்கத்தாவில் அஜீத்-ஸ்ருதிஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து அஜீத் நடித்து வரும் 'தல 56" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் முடிவடைந்து தற்போது அடுத்தகட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை படப்பிடிப்பை முடிந்தவுடன் அஜீத், ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் 'தல 56' படக்குழுவினர் கொல்கத்தா சென்றபோது தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாகவும், கொல்கத்தாவில் பெயத கனமழை காரணமாகவும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவில்லை என்றும், இதனால் மீதமிருக்கும் ஒருசில கொல்கத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க, படக்குழுவினர் அடுத்த மாதம் மீண்டும் கொல்கத்தா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜீத் டாக்சி டிரைவராகவும், ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராகவும் நடித்து வரும் இந்த படத்தில் இவர்களோடு லட்சுமிமேனன், கபீர்சிங், அஸ்வின் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அதிக பொருட்செலவில் ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். மேலும் இந்த இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout