இவர்தான் உண்மையான 'மெர்சல்' டாக்டர்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி ஒரு டாக்டர் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று அனைவர் மனதும் ஏங்கும் நிலையில் உண்மையிலேயே ரூ.10 மட்டுமே வாங்கி கொண்டு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஒருவர் தென்காசியில் இருப்பது தெரியவந்துள்ளது.

நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கும் இந்த டாக்டரின் பெயர் ராமசாமி. சில சமயம் நோயாளிகளிடம் பணம் இல்லை என்றாலும் மருத்துவம் பார்த்து அவர்களுடைய பஸ் போக்குவரத்துக்கு கையில் பணமும் கொடுத்து அனுப்புகிறாராம்.

நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் என்ற பகுதியை சேர்ந்த இவர் தென்காசி அருகேயுள்ள கருங்குளம் என்ற பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இதுவரை குடும்ப டாக்டர் என்றுதான் அனைவரும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த டாக்டர் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக உள்ளார்.

மருத்துவ சேவை குறித்து டாக்டர் ராமசாமி கூறியபோது, 'மருத்துவம் என்பது ஒரு சேவை. சேவை செய்ய ஆசை இருக்கின்றவா்கள் மட்டும்தான் மருத்துவம் படிக்க வேண்டும். மக்கள், மருத்துவர்களை தெய்வமாக நினைக்கிறார்கள். அதனால், மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் இந்தத் தொழிலோட புனிதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நோயாளியை கனிவாக அணுகவேண்டும். அவா்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். நம்பிக்கைதான் பாதி மருந்து. அதைக் கொடுக்கத் தவறக் கூடாது' என்று கூறியுள்ளார்.

மேலும் கல்வி, மருத்துவம் இரண்டும் அரசாங்கம் கையில் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

மருத்துவத்தை புனிதமான சேவையாக செய்து வரும் இந்த உண்மையான 'மெர்சல்' டாக்டருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்

More News

நெல்லை தீக்குளிப்பு மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் தீக்குளித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

'செம போதை ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' என நான்கு படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகரான அதர்வா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்

விஷாலின் அலுவலகத்தில் நேற்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால் உண்மையில் நேற்று சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

மெர்சலுக்கு எதிராக வழக்கு, போலீஸ் புகார்: இதற்கு ஒரு முடிவே இல்லையா!

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்த வசனங்களை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அந்த செய்தி படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

அவள்: ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உறைய வைக்கும் திகில் படம்

பேய்ப்படம் என்றால் பயத்தால் உறைய வைக்கும் காட்சிகள் இருக்கும் என்ற நிலை கடந்த சில வருடங்களாக மாறி பேய்ப்படம் என்றாலே காமெடி படம் என்ற நிலை கோலிவுட் திரையுலகில் ஏற்பட்டுவிட்டது.