எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

தேர்வு எழுத பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய ஐதராபாத் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இன்று காலை ஐதராபாத் அரசு பேருந்து ஒன்றில் எட்டு மாணவிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்று அரசு பொதுத்தேர்வு என்பதால் சரியான நேரத்திற்கு தேர்வு அறைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை. இந்த நிலையில் மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது.

தேர்வு ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அந்த எட்டு மாணவிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்தனர். அப்போது அந்த வழியாக காவல்துறை பேட்ரோல் வாகனம் ஒன்று வந்தது. அதில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு, மாணவிகளின் நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக தன்னுடைய காவல்துறை வாகனத்தில் எட்டு மாணவிகளையும் ஏற்றிக்கொண்டு அவர்களை சரியான நேரத்திற்குள் கொண்டுபோய் சேர்த்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களின் உதவியால் எட்டு மாணவிகளும் இன்று சரியான நேரத்திற்கு வந்து தேர்வை எழுதினர். இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களில் பரவியது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய ரியல் ஹீரோ ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்

More News

ஒரே ஒரு நாளில் 35 வருட சாதனையை தவறவிட்ட ஸ்ரீதேவி

தமிழில் பிரபலமாக இருக்கும்போதே பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி, அங்கும் நம்பர் ஒன் நடிகையாக மிக்குறுகிய காலத்தில் முன்னேறினார். பாலிவுட்டில் அவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்த முதல் திரைப்படம் 'ஹிம்மத்வாலா

சன்னிலியோன் சாகும் தினத்தில் என்ன நடக்கும்? சர்ச்சைக்குள்ளான கஸ்தூரி டுவீட்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுதான் அனைத்து இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக கடந்த நான்கு நாட்களாக உள்ளது.

சுபிக்சா சுப்பிரமணியன் கைது: ரூ.750 கோடி மோசடி செய்ததாக புகார்

ரூ.750 கோடி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக சுபிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் தமிழ்ப்பெண்ணிடம் பாராட்டு பெற்ற ஜோதிகா

நடிகை ஜோதிகா, 'துமாரி சுலு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் நடிக்கவுள்ளார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.