அரங்கத்தை அதிர வைத்த 'அஜித் 57' பட பாடலின் ஹம்மிங்

  • IndiaGlitz, [Wednesday,January 25 2017]

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு அல்லது ரம்ஜான் விருந்தாக அஜித் ரசிகர்களுக்காக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணியில் அனிருத் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து யோகி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ஒருசில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த பாடல் மிக மிக பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், தல ரசிகர்களை போலவே இந்த பாடலை கேட்கவும், திரையில் பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் அனிருத் ஒரு ரியல் EDM இசைக்கலைஞர் என்றும் அவருடன் பணிபுரிந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறிய அவர் அந்த பாடலின் ஹம்மிங்கையும் பாடி காட்டினார். 'தல 57' பாடலின் ஹம்மிங்கை யோகி பாடியபோது அரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையதளபதியுடன் மீண்டும் இணைகிறதா 'கத்தி' டீம்?

இளையதளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 'கத்தி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போதுகூட இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது...

அது எங்களோட வேலையில்லை. கமலுக்கு பீட்டா சி.இ.ஓ பதில்

ஜல்லிகட்டு பிரச்சனை சட்ட முன்வடிவின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவல்துறையின் தடியடி, முதல்வரின் நடவடிக்கை, பீட்டா தடை குறித்து பல கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தைரியமாக முன்வைத்தார்...

இணையதளத்தில் வைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண புகைப்படம்

தமிழில் 'கேடி' படத்தில் அறிமுகமான பிரபல நடிகை இலியானா, விஜய் நடித்த 'நண்பன்' உள்பட ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்

கமல் கருத்து முட்டாள்தனமானதா? சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் ரசிகர்கள் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, போராட்டக்காரர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர் இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பார் என்றும் கூறியிருந்தார்...

இளையதளபதியின் 'பைரவா' தமிழக வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் திருநாள் விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் ரூ.5.74 கோடி என்பதை நேற்று பார்த்தோம்.