அரங்கத்தை அதிர வைத்த 'அஜித் 57' பட பாடலின் ஹம்மிங்
Send us your feedback to audioarticles@vaarta.com
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு அல்லது ரம்ஜான் விருந்தாக அஜித் ரசிகர்களுக்காக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணியில் அனிருத் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து யோகி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ஒருசில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த பாடல் மிக மிக பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், தல ரசிகர்களை போலவே இந்த பாடலை கேட்கவும், திரையில் பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் அனிருத் ஒரு ரியல் EDM இசைக்கலைஞர் என்றும் அவருடன் பணிபுரிந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறிய அவர் அந்த பாடலின் ஹம்மிங்கையும் பாடி காட்டினார். 'தல 57' பாடலின் ஹம்மிங்கை யோகி பாடியபோது அரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The Most Awaited #Thala57 Update 👍
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2017
"@anirudhofficial - The Real EDM Artist"
- @iamyogib #Thala57SongUpdate 👇 pic.twitter.com/irnkw8LtiP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com