கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு கமலின் பதில்களும்:
Send us your feedback to audioarticles@vaarta.com
கேள்வி: இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்
கமல் பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டு விளக்கு. ஊழல் காற்றில் அனையாமல் பார்த்த் கொள்ளுங்கள்
கேள்வி: உங்களை பிடிக்கும். உங்கள் சினிமா பிடிக்கும், உங்கள் கவிதை பிடிக்கும், கருத்துக்களும் பிடிக்கும், அரசியல் இயக்கமும்ம் பிடிக்கும், நம்பி வரலாமா? எத்தனை நாட்கள் நீங்கள் தாக்கு பிடீப்பீர்கள்
கமல்: என் மூச்சுள்ளவரை தாக்கு பிடிப்பேன். அதற்கு பின்னால் அடுத்த தலைமுறை தாக்கு பிடிப்பார்கள். இங்கு யாரும் நிரந்தர முதல்வர் கிடையாது
கேள்வி: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் வி|ஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா?
நான் இரண்டாவது விஸ்வரூபம் அவதாரம் கூட எடுத்துவிட்டேன். இனிமேல்தான் மக்களுடன் இணைந்து நிஜ விஸ்வரூபம் எடுக்க வேண்டும்
கேள்வி: உங்கள் வழிகாட்டி யார்? காந்தி, பெரியார் அம்பேத்கர் காமராஜர் இவர்களில் யார் உங்கள் வழிகாட்டி
பதில்: நீங்கள் எத்தனை சாமி கும்பிடுகிறீர்கள். எல்லா சாமியும் உங்களுக்கு பிடிக்கும் தானே. அதுபோல் எனக்கு எல்லோரையும் பிடிக்கும். எனக்கு காந்தி, அம்பேத்கார், பிரனார்யி விஜயன், ஒபாமா எல்லோரையும் பிடிக்கும்
கேள்வி: ஊழலை ஒழிப்போம் என்று சொல்கிறீர்கள்./ இதனை எல்லோரும் சொல்லி விட்டார்கள். ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்?
பதில்:நாம் சேர்ந்து ஒழிப்போம். என்னால் தனியால் முடியாது. தனிமரம் தோப்பாகாது. செய்து காட்டுவோம். அதற்கு தனிப்பட்ட தியாகம் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் அளவில் ஊழல் இல்லையென்றால், உலகமே ஊழல் இல்லாமல் மாறிவிடும்
கேள்வி: உங்களுக்கு வாக்களித்து ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்துவிடால் குவாட்டரும் ஸ்கூட்டரும் கொடுப்பீர்களா?
பதில்:கண்டிப்பாக கொடுக்க மாட்டேன். ஆனால் நிங்கள் மற்றாவக்ரளுக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன். நீங்கள் வள்ளலாகலாம். இப்படி செய்தால் ஏழ்மைக்கே ஏழ்மை வந்துவிடும்
கேள்வி: தாய்க்குலத்திற்கு எதிராக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு என்ன வழி?
பதில்:நாம்தாம் வழி. வெறும் காதல் மட்டும் போதாது. அக்கா, தங்கை, அம்மா, மகள் என அனைவரையும் நினைத்து மனம் உருகினால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ந்டக்காது. எல்லோரையும் காதலியாக பார்க்க கூடாது. காதலியும் வேண்டும். ஆனால் காதலி தவிர மற்ற பெண்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்
கேள்வி: ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளித்தீர்கள். அதற்கு பாராட்டு? ஆனால். தமிழ்நாட்டில் தமிழ் செத்து கொண்டிருக்கின்றதே, அதற்கு என்ன செய்ய்வதாக உத்தெசம்
பதில்: சந்தோஷமாக அனைவரும் தமிழ் பேசினால் போதும். உரைநடையில் தமிழ் இருந்தால் தமிழ் நடக்கும். பேசுவதற்கு வெட்கப்பட்டல் தமிழ் மெல்ல அல்ல, உடனே சாகும். எனவே எல்லோரும் தமிழில் பேசுங்கள், தமிழ் தானாக வளர்ந்து விடும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout