நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தீவிரப்புயலுக்கு நடுவிலும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றியும் உடைந்த மின் கம்பங்களை மீண்டும் சரிசெய்தும் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கு தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார்.
நேற்று ஒரு சாமானிய மனிதர் சாய்ந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை அதே இடத்தில் நடவேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்தக் கோரிக்கையை பார்த்த தமிழக முதல்வர் உடனடியாக அந்த கோரிக்கைக்கு பதில் அளித்து, மீண்டும் அந்த இடங்களில் மரங்கள் நடப்படும் எனப் பதிவிட்டு இருந்தார். இதனால் சாமானிய மனிதனுக்கு செவிசாய்த் ததமிழக முதல்வருக்கு மேலும் பாராட்டுகள் குவிந்து வந்தன.
இதைத்தவிர தற்போது சமூக வலைத்தளங்களில் நிவர் புயலை எதிர்க் கொள்வதற்காக தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகள், பேரிடர் மீட்புக்குழு மேற்கொண்ட அர்ப்பணிப்பு பணிகள், அமைச்சர்களின் ஆய்வுப் பணிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நினைவுக் கூர்ந்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உயர்ந்து நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments