நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!

 

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தீவிரப்புயலுக்கு நடுவிலும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றியும் உடைந்த மின் கம்பங்களை மீண்டும் சரிசெய்தும் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கு தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார்.

நேற்று ஒரு சாமானிய மனிதர் சாய்ந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை அதே இடத்தில் நடவேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்தக் கோரிக்கையை பார்த்த தமிழக முதல்வர் உடனடியாக அந்த கோரிக்கைக்கு பதில் அளித்து, மீண்டும் அந்த இடங்களில் மரங்கள் நடப்படும் எனப் பதிவிட்டு இருந்தார். இதனால் சாமானிய மனிதனுக்கு செவிசாய்த் ததமிழக முதல்வருக்கு மேலும் பாராட்டுகள் குவிந்து வந்தன.

இதைத்தவிர தற்போது சமூக வலைத்தளங்களில் நிவர் புயலை எதிர்க் கொள்வதற்காக தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகள், பேரிடர் மீட்புக்குழு மேற்கொண்ட அர்ப்பணிப்பு பணிகள், அமைச்சர்களின் ஆய்வுப் பணிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நினைவுக் கூர்ந்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உயர்ந்து நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்!!!

தூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்? ஒட்டுமொத்த எவிக்சனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு அனைத்து போட்டியாளர்களும்

ஷிவானி கூட நிக்க வச்சு கேள்வி கேட்குறாங்கப்பா: பைத்தியம் பிடிக்கும் நிலையில் ரியோ!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒரு போட்டியாளரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு டார்கெட் செய்வது அதிகமாகி வருகிறது, முதலில் ஆரியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும்

நடுரோட்டில் பாட்டு பாடியபடி படகில் செல்லும் தமிழ் நடிகர்!

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் கனமழை பெய்து அதன் காரணமாக சென்னை

வாணி போஜனின் அடுத்த பட ஹீரோ ஒரு தயாரிப்பாளரா?

'தெய்வமகள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.