கட்டிப்பிடிக்கும் தொழிலில் பெண்கள்? ஒருமணி நேரத்திற்கு ரூ.7,000 வசூலிக்கும் ஆச்சர்யம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மருத்துவ முத்தம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டோம். அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் பல இடங்களில் மருத்துவ முறையிலான கட்டிப்பிடிக்கும் தொழில் சூடுபிடித்து இருக்கிறது.
இப்படி கட்டிப் பிடிப்பதற்கு கீலி ஷூப் எனும் பெண்மணி ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் வசூலிக்கிறாராம். அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,300 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற பழமையான சமூகத்தில் கை குலுக்குவதையே பலரும் விரும்புவதில்லை. ஆனால் வளர்ந்து விட்ட சமூகங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது அக்கறையாக அரவணைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த அணைப்புக்கு வாய்ப்பு இல்லாமல், பல நாடுகளில் மக்கள் ஏங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவில் பல இடங்களில் அரவணைப்புக்கு என்றே பெண்கள் சிலர் தொழில் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற தொழிலில் பாதுகாப்பு இருக்குமா என்ற சந்தேகம் உடனே வரலாம். ஆனால் இதுகுறித்து கூறும் கீலி ஷூப் சில வாடிக்கையாளர்கள் வித்தியாசமான கோரிக்கையை வைக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இதைத் தவிர்த்துவிட்டு எச்சரிக்கையோடும் அதேநேரத்தில் அக்கறையோடும் இதை செய்து வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் அரவணைப்பைத் தவிர சிலர் புத்தகத்தை வாசிக்கும்படி சொல்வதாகவும் செல்லப் பிராணிகளைப் போல சண்டையிடச் சொல்வதாகவும் அந்தப் பெண் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் இப்படி கட்டிப்பிடிக்கும் போது தனது வாடிக்கையாளர்கள் கவலைகளை எல்லாம் மறந்து நிம்மதி பெருமூச்சு அடைவதைப் பார்க்க முடிகிறது என்றும் கீலி ஷூப் தெரிவித்து உள்ளார். இவரைத் தவிர கான்சாஸில் கட்டிப்பிடிக்கும் தொழிலை செய்துவரும் ராபின் மேரி எனும் பெண்மணி வருடத்திற்கு ரூ.28 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் கொரோனா நேரத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே மருத்துவ முறையிலான கட்டிப்பிடிக்கும் தொழில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா நேரத்தில் இத்தொழில் மேலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com