கண்முடித்தனமாக நடந்து கொண்ட காவலர்...! சஸ்பெண்ட் செய்ய புகாரளித்த ஹோட்டல் ஓனர்.......!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
கோவை, தனியார் உணவகத்தில் உள்நுழைந்து பணியாளர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யுமாறு, ஹோட்டல் ஓனர் கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
கோவை,காந்திபுரம் பகுதியில் தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களை, காட்டூர் காவல் நிலைய உதவி முத்து கண் மூடித்தனமாக தாக்கியத்தில், அவர்கள் காயமடைந்தனர். இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட காவல் ஆணையர், காவலர் முத்துவை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தனியார் ஹோட்டல் ஓனர் மோகன்ராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில், தனது மனுவை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது, பசி என்றுகேட்டதால் தான் உணவு வழங்கினோம், இரவு 11 மணி வரை கடை செயல்பட நேரம் உள்ளநிலையில், காவலர் உள்ளே புகுந்து பொதுமக்களையும், ஊழியர்களையும் தாக்கினார்.உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கியதில் ஊழியர்கள் 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் போல பலமுறை காவல் அதிகாரிகள் கடுமையாக நடந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவரை பணியிடநீக்கம் செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.