வெப்பமயமாகும் பூமி. உணவைத் தேடி ஊருக்குள் வந்த பனிக்கரடிகள்.

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும் பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.இதற்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடற்கரை பகுதியில் குறைந்த பனியே இருப்பதால் அவை கடலை விடுத்து உணவைத் தேடி கிராமத்திற்குள் வருகிறது என்கின்றனர் ஆர்வலர்கள்.

மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றனர்.அந்த கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன. பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும், என ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ தெரிவித்துள்ளார்.பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.ரிர்காப்பி என்னும் இடத்திலிருந்து சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புவி வெப்பமயமாதல் எதிர்கால சந்ததியினருக்கும் மனிதர்களைத் தவிர்த்த பிற உயிரினங்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது பற்றி பல சூழ்நிலை ஆய்வாளர்கள் போராடி வந்தாலும் இன்னும் உலக அரசுகளின் கவனம் இதை நோக்கி திரும்பவில்லை என்பதே உண்மை.  

 

More News

என்கவுண்டர் போலீஸார் புகைப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் பெண்கள்

ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்களை இன்று அதிகாலை

தெலுங்கானா என்கவுண்டர் போலீசார்களை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை

தெலங்கானா மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய என்கவுண்டர் நடவடிக்கைக்கு ஒரு பக்கம் பேராதரவு கிடைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இதே தண்டனை மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? பிரபல வீராங்கனை கேள்வி

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் சுட்டு, என்கவுண்டர் செய்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்கிச் சூடு..! வீடியோ.

உத்திரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் நடனம் ஆடிய பெண்ணின் முகத்தில் ஒருவர் சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்தது