தம்பி நான் ஒரு சீன்ல்ல வர்றேன்: 'பிகில்' டிரைலரை பார்த்த பிளேயர்ஸ்

  • IndiaGlitz, [Sunday,October 13 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்து கொண்டிருக்கின்றது. ஒருசிலர் இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருந்தாலும் பெரும்பாலானோர் விஜய்யின் கெட்டப், ஆக்சன், நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் புட்பால் விளையாடிய பிளேயர்ஸ் இந்த படத்தின் டிரைலரை பார்த்து மகிழ்ச்சி அடைந்து தாங்கள் தோன்றும் காட்சிகளை குறிப்பிட்டு ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்றை அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஒரு பிளேயர், ‘தம்பி நான் ஒரு சீன்ல்ல வர்றேன்’ என்று சந்தோஷத்தில் குதித்தபடியே கூறுகிறார்.

’பிகில்’ படத்தில் புட்பால் பிளேயர்களாக துணை நடிகர்கள் மட்டுமின்றி உண்மையான புட்பால் பிளேயர்களும் நடித்துள்ளார்கள் என்பதும் அவர்களில் சிலர் ‘சென்னையின் எஃப்சி’ அணியின் பிளேயர்கள் என்பதும் தெரிந்ததே.