கருணாநிதியை நேரில் பார்த்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானது

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வந்தார்.

கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்குள் செல்ல அனுமதி பெற்ற ராகுல்காந்தி அவரை நேரில் பார்த்தார். அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கருணாநிதிக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் உடன் இருந்தனர். ராகுல்காந்தியின் வருகையை மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் காதில் கூறுவது போன்று இந்த புகைப்படத்தில் உள்ளது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறார். எந்தவித செயற்கை உபகரணங்களும் இல்லாமல் கருணாநிதி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்ததும் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More News

ஜெயம் ரவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்?

விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

ஜெய்யின் 'ஜருகண்டி' சென்சார் தகவல்

ஜெய நடிப்பில் அவருடைய நண்பர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வந்த 'ஜருகண்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: சென்னையில் நிர்வாண வீடியோ கும்பல் கைது 

ஃபேஸ்புக் நட்பை பயன்படுத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் சென்னை கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுக்கு ஜூலி நூறு மடங்கு மேல் போல் தெரியுதே! ஐஸ்வர்யாவின் அட்டுழியங்கள்

பிக்பாஸ் வீட்டில் உள்ளப் போட்டியாளர்களில் பிக்பாஸின் முழு ஆதரவை பெற்றவர் ஐஸ்வர்யா. மக்கள் வாக்குகள் போட்டு அவரை வெளியேற்ற நினைத்தாலும் பிக்பாஸ்

ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நேற்று அவருக்கு ஒரு சவால் விடுத்தார்.