யுவன்ஷங்கர் ராஜாவின் மறுபக்கம்: மனைவி சொல்லும் ரகசியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக திரையுலகில் யுவன்ஷங்கர் ராஜா என்றால் அமைதியானவர், கோபப்படாதவர், ரெக்கார்டிங் போது கூட வேலையில் மட்டும் மும்முரமாக இருப்பவர் என்றுதான் அறியப்பட்டதுண்டு. ஆனால் வெளியில் இருப்பது போல் அவர் வீட்டில் இருப்பதில்லை என்றும், வீட்டில் யுவன் ஒரு குறும்புக்காரர் என்றும் அவரது மனைவி ஜாப்ரூன் நிஷார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
யுவன் வெளியில் இருப்பது போல் வீட்டில் அமைதியானவர் இல்லை என்றும், அவரது செல்ல சேட்டைகள் வீட்டில் அதிகம் இருக்கும் என்றும் கூறிய ஜாப்ரூன், யுவன் நன்றாக மிமிக்ரி செய்பவர் என்றும் பலகுரல்களில் மிமிக்ரி செய்து அசத்துவார் என்று கூறினார். மேலும் அவரிடம் வீட்டில் நாங்கள் ஜாக்கிரதையாக இருப்போம், இல்லையென்றால் அவர் எங்களை கேலி செய்தே வெறுப்பேற்றுவார் என்றும் கூறினார்.
மேலும் ஜாப்ரூன் மனைவி ஒரு இல்லத்தரசி மட்டுமின்றி தற்போது அவர் பிக்பாஸ் புகழ் ரெய்சா நடித்து வரும் பியார் பிரேமா காதல்' படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com