டிஜிட்டலில் வெளியான படங்களுக்கும் ஆஸ்கார் உண்டா? அதிகாரபூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியா உட்பட பல நாடுகளில் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன என்பதும் இன்னும் திரையரங்குகள் திறப்பதற்கு ஒரு சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது
இதனால் 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான படங்கள் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை ஒருசில படங்களே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அந்த படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது
இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டலில் அதாவது ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக வெளியாகும் படங்களும் 2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ய தகுதி பெறும் என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
இதனை அடுத்து நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் அந்த படங்களும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்