கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஒரே இந்திய மாநிலம்!!! ஐ.நா. சபை பாராட்டு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டு வருகின்றன. ஆனால் ஒரு இந்திய மாநிலத்தில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநிலத்திற்கு ஐ.நா. பொதுச் சபையும் பாராட்டுத் தெரிவித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 23 ஆம் தேதி ஐ.நா சபையின் சார்பாக பொதுச்சேவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளை முன்னிட்டு உலகத் தலைவர்களை இணைத்து வெப் தொலைக்காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவில் இருந்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்தியாவில் முதன் முதலாக கொரோனா நோய்த்தொற்று கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது கொரோனவை கட்டுப்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக கேரளா திகழ்ந்து வருகிறது. எனவே கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜா அவர்களுக்கும் மாநில அரசுக்கு ஐ.நா. பொதுச்சபையின் சார்பாக பாராட்டுத் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நாவின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ், ஐ.நாவின் தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சின் யங், உலகச் சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் டெட்ரோஸ் அதோனோம், எத்தோப்பிய அதிபர் ஷாலே வொர்க் ஜுடே மற்றும் ஐ.நா.வின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் கேரளாவிற்கு பாராட்டுத் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அக்கூட்டத்தில் பேசிய கேரளச் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, “கேரளாவில் கடந்த இருமுறை ஏற்பட்ட மழை வெள்ளக் காலத்தைச் சமாளித்த அனுபவம், நிபா வைரஸை திறம்படக் கையாண்டது போன்ற அனுபவம் கொரோனா வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த உதவியது. சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்து கேரள அரசு விழிப்புடன் செயல்பட்டு தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களைப் பின்னபற்றத் தொடங்கியது” எனத் தெரிவித்தார்.
மேலும், “எந்த ஒரு வழிகாட்டலையும் அலட்சியப் படுத்தாமல் தீவிரமாகச் செயல் படுத்தினோம். இதனால் கேரளாவில் கொரோனா பரவல் 12% க்கும் கீழாகவே இருந்தது. உயிரிழப்பும் 0.6% ஆக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப் பட்டதும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனையைத் தீவிரப் படுத்தினோம், இதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. பல்வேறு தளங்களிலும் மாநில சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாகக் கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதனை செய்தல், சிகிச்சை ஆகிய வழிமுறைகளை மாறாமல் செயல்படுத்தினோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
கேரளாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் ஒன்று பிரேக் தி செயின், ரிவர் குவாரண்டைன் என்று கொரோனா அறிகுறி உள்ளவர்களையும் அவர்களுடன் தொடர்புள்ளவர்களையும் 24 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர். கொரோனா பரிசோதனை கேரளாவில் அதிகமாக செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்புகளைக் கண்காணிக்கும் செயல்பாடு கேரளா சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,451 ஆக பதிவாகி இருக்கிறது. இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அறிவிப்பில் தெளிவு படுத்தி இருக்கிறது. இதுவரை கேரளாவில் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout