ஐபிஎல் 2018: தல தோனிக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றால் அது மிகையாகாது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தல தோனியின் சாதனை ஒன்று அவருக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை இந்த போட்டியில் கலந்து கொண்ட அணிகளில் சென்னை அணி மட்டுமே தல தோனி என்ற ஒரே கேப்டன் தலைமையில் விளையாடியுள்ளது. மற்ற அணிகள் அனைத்து அவ்வப்போது கேப்டன்களை மாற்றி மாற்றி வருகிறது.
குறிப்பாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிகபட்சமாக 11 கேப்டன்களை பார்த்துள்ளது. இந்த சீசனிலேயே காம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் என இரண்டு கேப்டன்களை அந்த அணி பார்த்துள்ளது.
மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 கேப்டன்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகள் தலா 4 கேப்டன்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 கேப்டன்களையும் கண்டுள்ளது.
தல தோனி ஓய்வு பெறும் வரை சென்னை அணிக்கு அவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments