ஐபிஎல் 2018: தல தோனிக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

ஐபிஎல் போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றால் அது மிகையாகாது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தல தோனியின் சாதனை ஒன்று அவருக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை இந்த போட்டியில் கலந்து கொண்ட அணிகளில் சென்னை அணி மட்டுமே தல தோனி என்ற ஒரே கேப்டன் தலைமையில் விளையாடியுள்ளது. மற்ற அணிகள் அனைத்து அவ்வப்போது கேப்டன்களை மாற்றி மாற்றி வருகிறது.

குறிப்பாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிகபட்சமாக 11 கேப்டன்களை பார்த்துள்ளது. இந்த சீசனிலேயே காம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் என இரண்டு கேப்டன்களை அந்த அணி பார்த்துள்ளது.

மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 கேப்டன்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகள் தலா 4 கேப்டன்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 கேப்டன்களையும்  கண்டுள்ளது. 

தல தோனி ஓய்வு பெறும் வரை சென்னை அணிக்கு அவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

150 நாட் அவுட்: தல தோனிக்காக காத்திருக்கும் புதிய சாதனை

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி தூள் கிளப்பி வருகிறது.

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக பார்க்கவேண்டும்: இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், அதே பாணியில் மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து.

ரஜினி நல்லவர் என்றால் 8 கோடி தமிழர்கள் யார்? சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடும் பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை விட்டுவிட்டு ரஜினியை எதிர்ப்பதிலும் விமர்சனம் செய்வதிலும்

மெரீனாவில் போராட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

கழுதைக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய காஷ்மீர் அரசு

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தாசில்தார் பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பும் பணியில் காஷ்மீர் அரசின் தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.