தேமுதிகவுக்கு ஒரே ஆப்சன்: கூட்டணி உண்டா? இல்லையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது போல் 'ஒரு பெண் இருந்தால் பத்து பேர் பார்க்க வருவார்கள்' என்பது உண்மைதான். ஆனால் ஒரே பெண்ணை ஒரே நேரத்தில் இரண்டு மாப்பிள்ளைகளுக்கு பேசும் கொடுமை உலகில் எங்காவது நடந்தது உண்டா? ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் பேசும் இரட்டை வேடம் கலைந்ததால் தேமுதிக தற்போது மக்கள் மத்தியில் மதிப்பிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவையும், அதிமுகவின் 37 எம்பிக்களையும் ஜெயலலிதாவையும் பிரஸ்மீட்டில் பிரேமலதா விமர்சனம் செய்தும் மீண்டும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க அதிமுக கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது. வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு. இதில் உடன்பாடு என்றால் கூட்டணி, இல்லை என்றால் இல்லை என்று அதிமுக தரப்பு கறாராக கூறிவிட்டதாம்.
தனித்து போட்டியிட்டாலோ, 3வது அணி அமைத்தாலோ 40 தொகுதிகளிலும் டெபாசிட் கூட தேறாது என்பது தேமுதிகவுக்கு நன்கு தெரியும். எனவே அக்கட்சிக்கு உள்ள ஒரே ஆப்சன், கொடுத்த நான்கு சீட்டுக்களை பெற்று அதில் இரண்டிலாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இன்று கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தேமுதிக கூறிய நிலையில் அக்கட்சி என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout