அக்சராஹாசனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இருவரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப போட்டி போட்டு கொண்டு திரையுலகில் நடித்து வருகின்றனர்.

இவர்களில் அக்சராஹாசன், அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் ‘விவேகம்’, விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’மற்றும் ‘பிங்கர்டிப்’ என்ற வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார். தற்போது அவர் நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல் படத்தில் அக்சராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவொரு நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட படம் என்றும், அக்சராஹாசன் இந்த படத்தில் ரசிகர்களை தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துவார் என்றும் இந்த படத்தின் இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.