இசைஞானி இசையில் வெளியாக காத்திருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் எம்எம் பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் மிகுந்த பொருட் செலவில் அமைக்கப்பட்டு இருந்த புதிய ரெக்கார்டிங் ஸ்டூடியோவை திறந்தார். இந்த ஸ்டுடியோ திறப்பு விழாவிற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஒரு சிலர் தற்போது இளையராஜாவுக்கு அதிக படங்கள் கைவசம் இல்லாத போது சொந்தமாக ஸ்டூடியோ தேவையா? என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு கருத்து தெரிவிப்பதற்கு பதிலடியாக தற்போது அவர் எத்தனை படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்? அவரது இசையில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை? என்பது குறித்தும் பார்ப்போம்.

வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம், எஸ்பிபியின் கடைசி படமான ‘மருது’, 6 மொழிகளில் உருவாகியிருக்கும் ‘கமணம்’, இயக்குனர் வசந்த் படம், விஷாலின் ‘துப்பறிவாளன் 2’, தெலுங்கு இயக்குனர் வம்சியின் படம், ‘பொன்னியின் செல்வன் என்ற வெப்தொடர், விஜய்சேதுபதியின் ‘மாமனிதன், மோகன்பாபுவின் தெலுங்கு படம், இயக்குனர் மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘கிளாப்’, இயக்குனர் சாமியின் ‘அக்கா குருவி’, ‘சிபிராஜின் ‘மாயோன்’, மற்றும் ஒரு கன்னட திரைப்படம், இதுபோக ஒரு குறும்படம் ஆகியவை இசைஞானியின் கைவசம் உள்ளது. இந்த பட்டியலை பார்த்த பின்னர் இசைஞானிக்கு ஏன் புதிய ஸ்டுடியோ என யாராவது கேள்வி கேட்பார்களா? அன்றும், இன்றும், என்றும் இசைஞானி, இசைஞானி தான்.