அஜித்தின் கண்களில் ஒரு சிறுவனின் துள்ளல் தெரிந்தது. ஹாலிவுட் நடிகை ஆச்சரியம்

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

கோலிவுட்டில் பல திரைப்படங்கள் உலக தரத்தில் தயாரிக்கப்படுவதாக விளம்பரத்தினாலும் உண்மையாகவே உலக தரத்தில் உருவான படம் 'விவேகம்' என்பது அந்த படம் குறித்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. உலக தரத்தில் உருவாகும் படங்களில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டுமின்றி வேறு சில முக்கிய கேரக்டர்களும் படத்தை தூக்கி நிறுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் 'விவேகம்' படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic) என்பவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அஜித், சிவா மற்றும் படக்குழுவினர் குறித்தும் அமிலா டெர்ஜிமெஹிக் கூறியதாவது:
'விவேகம்' போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குனர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த 'தி நவம்பர் மேன்' படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா, 'விவேகம்' பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன். விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது .ஆக்ஷன் படங்களின் ரசிகையான எனக்கு இயக்குனர் சிவா கூறிய 'விவேகம்' படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
அஜித் குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை. எல்லா ஆபத்தான சண்டை கட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.
'விவேகம்' படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் 'விவேகம்' படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்.'' என்றார்.

More News

'விஐபி 2' அதிகாலை காட்சி திடீர் ரத்து! காரணம் என்ன?

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

ஓவியாவுக்கு பதிலாக புதிய நட்சத்திரம்: களைகட்டுமா பிக்பாஸ்?

கடந்த சில வாரங்களாக தமிழக மக்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் களையிழந்து காணப்படுகிறது...

சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார்...

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.

விஷாலின் 25வது படத்தின் பூஜை! ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான செட்

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றூம் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்