மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு… பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Monday,October 05 2020]
2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் துவங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழிவகுத்துள்ளது. அதிலும் ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற துரிதமான ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்கிறது.
நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்மன் ஸ்டாக்ஹோமில் இருந்து இன்று மதியம் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளின் பெயரை வெளியிட்டார். மேலும் நாளை முதல் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.