வேதியியல் துறைக்கான நோபல் பரிசை கூட்டாகத் தட்டிச் செல்லும் இரு பெண்கள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
நோபல் பரிசு 2020 க்கான பட்டியலை நோபல் அறக்கட்டளை நேற்று முன்தினம் முதல் வெளியிட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் இதுவரை 3 பெண்கள் இடம்பெற்று உள்ளனர். அதுவும் வேதியியல் துறைக்கான நோபல் விருதினை 2 பெண்கள் கூட்டாக வாங்க இருக்கின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா என்ற இரு விஞ்ஞானிகளுக்கும் வேதியியல் துறைக்கான நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது. மரபணுக் குறித்த ஆய்வுகளுக்கான இவர்களுக்கு இந்த சாதனை விருது வழங்கபடுகிறது.
2020 நோபல் விருதுக்கான போட்டியில் உலகம் முழுவதும் 211 தனிநபர்கள் மட்டும் 107 அமைப்புகள் என 318 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் நேற்று முன்தினம் மருத்துவத் துறைக்கான நோபல் விருது பட்டியல் வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டர் ஆகிய 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பட்டியல் நேற்று வெளியானது அந்தப் பட்டியலில் ஒரு பெண் இடம் பெற்றார். ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில் மற்றும் ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அக்டோபர் 9 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 10 ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments