ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு,  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ! 

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.

Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.

பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால் உடைந்து போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.

பரபரப்பான திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராக, மலைநகர பின்னணியில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.

நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் வெங்கட் இயக்கத்தில் சுதர்சன் குமார் இசையில் ராஜ்குமார் ஒளிப்பதிவில் மதிவதனன் படத்தொகுப்பில் இந்த வெப்தொடர் உருவாகியுள்ளது.

அயலி” , “செங்கலம்” வெப் சிரீஸ்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, இந்த “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான அனுபவம் தரும் “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் கண்டுகளியுங்கள்.

More News

ரக்சிதாவை அடுத்து புத்தம் புது கார் வாங்கிய 'பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா, தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கினார் என்பதும், அப்போது அவரது நெருங்கிய தோழி ஷிவின்

'பொன்னியின் செல்வன் 2' புரமோஷனில் 'லியோ' குறித்து பேசிய த்ரிஷா.. ரசிகர்கள் உற்சாகம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின்

எஸ்ஜே சூர்யாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர்: ஏன் தெரியுமா?

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும்  'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று எஸ்ஜே சூர்யாவுக்காக படக்குழுவினர் கேக் வெட்டி

சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': நீண்ட இடைவெளிக்கு பின் மாஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்..!

சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இடையில் சில ஆண்டுகளாக கிடப்பில்

சித்தார்த் - அருண்குமார் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் அறிவிப்பு..!

நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.