உண்மை சம்பவ த்ரில் படத்தில் வரலட்சுமி

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படம் உள்பட சுமார் பத்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் பிசியான நடிகையாக வரலட்சுமி உள்ளார். அதுபோக சமூக சேவையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்

இந்த நிலையில் வரலட்சுமி நடிக்கும் மேலும் ஒரு படத்தின் அறிவிப்பும் அந்த படத்தின் டைட்டிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் டைட்டில் 'வெல்வெட் நகரம். நயன்தாரா, த்ரிஷா படங்கள் போல் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதை உள்ள இந்த படம் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இந்த படத்தை மேக்கர்ஸ் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு அச்சு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது