லைகா நிறுவனத்தின் அடுத்த மாஸ் படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட பெரிய நடிகர்கள் அனைவருமே லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகின்றனர். ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களும் இதில் அடங்கும்
இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய பவன்கல்யாணின்'AttarintikiDaredi' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் நடிப்பில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த படம் 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சுமார் ரூ.187 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், தெலுங்கில் நடித்த சமந்தாவே தமிழிலும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com