'உறியடி' தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Sunday,October 29 2017]

தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்த 'உறியடி'. அரசியல் த்ரில்லர் படமான இந்த படம் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சமீர் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

தெலுங்கு திரையுலகில் பட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய பாலுசர்மா கூறிய கதை ஒன்று சமீரை கவர்ந்ததால் அந்த கதையையே தனது அடுத்த படமாக முடிவு செய்துள்ளார். காமெடி மற்றும் காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படவுள்ளதால் இரண்டுக்கும் பொருத்தமான ஹீரோ, ஹீரோயின் உள்பட நட்சத்திரங்களை தேர்வு செய்யவுள்ளதாக் சமீர் கூறியுள்ளார்.

தெலுங்கில் 'Neetho' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்திற்கான தமிழ் டைட்டில் குறித்த ஆலோசனை ந்டந்து வருவதாக கூறிய சமீர், வரும் ஜனவரி அலல்து பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்.

More News

கமல் களப்பணியால் கலெக்டர் அளித்த அதிரடி வாக்குறுதி

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்தவர் என்ற விமர்சனத்தை உடைக்கும் வகையில் இன்று களப்பணியில் இறங்கினார்.

கிண்டல் செய்த அடையாளத்தை பெருமையாக்கியார் விஜய்: ப.சிதம்பரம் 

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்த வசனங்கள் இருந்தது. இந்த வசனங்களை நீக்க வேண்டும்

கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லை: அதிமுக மூத்த தலைவர்

எண்ணூர் துறைமுகத்தில் ஆற்றை வழிமறித்து அரசு நிறுவனங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் இன்று களப்பணியாக அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

கமல் களப்பணி: அரசியல் தலைவர்களின் ரியாக்சன் என்ன?

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கு நேரடியாக என்று களப்பணி ஆய்வில் இறங்கியது அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் மீது ஒருசில அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.