எல்லாருக்கும் ரெண்டு முகம் இருக்கும்: சுரேஷால் ஆரம்பமாகும் அடுத்த சண்டை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரே வாரத்தில் மூன்று நான்கு சண்டைகளை பார்த்துவிட்டோம். குறிப்பாக சுரேஷ்-அனிதாசம்பத், சனம்ஷெட்டி- பாலாஜி முருகதாஸ், சனம்ஷெட்டி-ரேகா, ஆகியவைகளை அடுத்து தற்போது சுரேஷிடம் ரியோ சண்டை போடும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளன.
இந்த புரோமோ வீடியோவில் யார் யாரெல்லாம் முகமூடி போட்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என பாலாஜி முருகதாஸ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி ’ரியோவை உதாரணமாக கூறினார். அப்போது டென்ஷனான ரியோ, ‘என்னை உதாரணம் காட்டி கூற வேண்டாம், பாலாஜி கேட்ட கேள்விக்கு மட்டும் கூறுங்கள் என்று கூற நான் உன்னை உதாரணமாக கூறவில்லை நீ கூறிய எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும் என்பதை தான் சொல்ல வந்தேன்’ என்று கூற மீண்டும் ரியோ டென்ஷன் ஆனார்.
இதுவரை அமைதியாக சிரித்த முகத்துடன் ஜோக் அடித்துக் கொண்டிருந்த ரியோ தற்போது தனது உண்மையான முகத்தை காட்டி உள்ளதை அடுத்து அவர் தனது முகமூடியை கழட்டி விட்டதாகவே கருதப்படுகிறது. ரியோ-சுரேஷின் சண்டை எந்த கட்டம் வரை செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day8 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/1EXR3bkMgJ
— Vijay Television (@vijaytelevision) October 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments