எஜமானர்-வேலைக்காரி டாஸ்க்: முரண்டு பிடிக்கும் மும்தாஜ்
- IndiaGlitz, [Wednesday,June 27 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூளையை கசக்கி உருவாக்கிய டாஸ்க் போல் தெரிகிறது இந்த எஜமானர்-வேலைக்காரி டாஸ்க். ஏற்கனவே மும்தாஜ், மமதி போன்ற பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளனர். இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் இந்த டாஸ்க் அமைந்துள்ளது.
டாஸ்க் ஆரம்பிக்கும் முன்னரே 'நான் தமிழ்ப்பெண், கலாச்சாரத்துடன் வளர்ந்தவர், எனவே இந்த டாஸ்க்கில் கைகால் அமுக்கி விடுவது போன்ற வேலைகளை கொடுத்தால் செய்ய முடியாது என்று மமதி கண்டிஷன் போடுகிறார். அதேபோல் மும்தாஜூம் எதற்கும் ஒரு லிமிட் உண்டு, லிமிட்டை தாண்டினால் நான் எவிக்சன் பட்டியலுக்கு சென்றாலும் பரவாயில்லை சில குறிப்பிட்ட வேலைகளை செய்ய முடியாது என்று டாஸ்க் குறித்த தனது கருத்தை தெரிவிக்கின்றார்
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஐஸ்வர்யா, ஷாரிக்கிற்கு கை அமுக்கிவிடுவது, யாஷிகா, மகத்தின் துணிகளை துவைத்து போடுவது, செண்ட்ராயனுக்கு ரித்விகா பந்தை எடுத்து கொடுப்பது, நித்யா, பாலாஜிக்கு கை அமுக்கி விடுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மும்தாஜ் ஒருசில வேலைகளை செய்ய முடியாது என்று முரண்டு பிடிக்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாய்-மகன் செண்டிமெண்டில் கண்ணீர் விட்ட மும்தாஜுக்கும் ஷாரிக்கிற்கும் மோதல் ஏற்படுகிறது. இன்றும் இந்த டாஸ்க் தொடர்வதால் இதன் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/jKjsAkyE2t
— Vijay Television (@vijaytelevision) June 27, 2018