தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய போராட்டம் குறித்து அதிரடி அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய போராட்டம் மற்றும் கோரிக்கைகள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முக்கிய கோரிக்கைகள்:

1. டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட விபிஎப் கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம்

2. திரையரங்கு கட்டணங்களை படத்திற்கு ஏற்றவாறு குறைத்து மக்களுக்கு படம் பார்க்கும் ஆர்வத்தை மிகைப்படுத்த வேண்டும்

3. மக்களின் சுமையை அதிகரிக்கும் ஆன்லைன் டிக்கெட்டுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்

4. அனைத்து திரையரங்க்குகளிலும் உடனடியாக கம்ப்யூட்டரைஸ்டு டிக்கெட் புக்கிங்கை நடைமுறை படுத்த வேண்டும்

5. சிறிய படங்களின் முக்கிய பிரச்சனையான தியேட்டர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரிலீஸ் ரெகுலேசன் கொண்டு வருதல்

6. தயாரிப்பு செலவுகளை வெகுவாக கட்டுப்படுத்த அனைத்து வித ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்


மக்களுக்கான மக்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் எப்படி மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என்ன விலை வைக்க வேண்டும், எந்தெந்த விதத்தில் அதை மக்கள் பயன்படுத்துமாறு ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டாக்க வேண்டும் போன்ற நடைமுறைகளை அப்பொருளின் உற்பத்தியாளரோ, நிறுவனமோதான் நிர்ணயம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. அதன் முழு உரிமை அந்த உற்பத்தியாளருக்கே உண்டு.

ஆனால் இந்தத் திரையுலகில் மட்டும் இது ஏன் நடைமுறையில் இல்லை. சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை கிடைக்கப் பெறவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை ரிதுவர்மா

தெலுங்கு நடிகை ரிதுவர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்களும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை

போன வருடம் பரதம், இந்த வருடம் பாட்டு: ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது தெரிந்ததே. குடும்பம், குழந்தைகளை கவனித்து கொண்டே அவர் திரைப்படம் இயக்குவது உள்பட பல்வேறு கலைப்பணிகளை செய்து வருகிறார்.

நயன்தாராவுடன் டான்ஸ் ஆடிய நடிகரை பார்த்து ஆத்திரமடைந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தி நடித்திருந்த ராகுல் தாத்தா நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவை புகழ்ந்த காமெடி நடிகருக்கு நன்றி கூறிய சூர்யா

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் '36 வயதினிலே' படத்தின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்

ஆன்மீக சுவாமி மலையாறிவிட்டார்: ரஜினியை கிண்டல் செய்த அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் காலா' மற்றும் '2.0' படப்பிடிப்பு காரணமாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலை செல்லவில்லை