ஆஹா இதுபுதுசா இல்ல இருக்கு… இணையத்தில் வைரலாகிவரும் “420” “ராகுல்மோடி” பெயர்!!!
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஹரியாணாவை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தவரைவிட 420 ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்ற மற்றொரு நபர்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருக்கிறார். காரணம் அவருடைய பெயர் ராகுல்மோடி .
அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்து வரும் இந்த இருவரையும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு நபரின் பெயர் இணைத்திருக்கிறது. இதனால் ராகுல்மோடி என்ற பெயரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வதும் அதிகரித்து இருக்கிறது. தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இருவரின் பெயர்களையும் இணைத்து வைத்ததுபோலவே ராகுல்மோடி என்ற இளைஞர் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 420 ஆவது இடத்தைப்பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த பெயர் குறித்து தற்போது பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். ராகுல்மோடி, நீங்க எந்த கட்சிக்கு ஆதரவாளர்? காங்கிரஸ் கட்சியா? அல்லது பாரதிய ஜனதவா? என்று ஒரு இணையவாசி கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் “இந்த நூற்றாண்டின் ஒரு மாபெரும் இணைப்பு” என்று பதிவிட்டு இருக்கிறார். இத்தகைய கிண்டலுக்கு மத்தியில் “சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்னவென்று தெரியுமா? இதில் தேர்ச்சிப்பெற அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். இப்படி கிண்டலடிப்பதை நிறுத்துங்கள்” என மற்றொரு பதிவு காட்டமாகவும் வந்திருக்கிறது.