கமல், ரஜினி, அஜித், விஜய்யுடன் ஒரே நேரத்தில் பணிபுரியும் பிரபலம்!

கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்களின் படங்களில் ஒரே நேரத்தில் பணிபுரியும் பிரபலம் ஒருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் இளம் இசை புயல் என்ற பெயரெடுத்த அனிருத் தற்போது ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்களின் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ’விக்ரம்’ ’ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 169’ ’ தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’, அஜித் நடிக்கவிருக்கும் ’அஜித் 62’ ஆகிய படங்களின் இசையமைப்பாளர் அனிருத் தான். மேலும் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ சிவகார்த்திகேயனின் ‘டான்’ மற்றும் விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களிலும் அனிருத் பணிபுரிந்துள்ளார்.

மேலும் இது தவிர பிரபல தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் அனிருத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.