தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ’ராக்கி’ என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக்காகிதம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த நிலையில் தற்போது மீண்டும் தனுஷூடன் அவர் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.