பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் GOAT, மனம் திறக்கும் வெங்கட் பிரபு

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

கடந்த சில நாட்களாகவே GOAT திரைப்படம் குறித்த hype அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்களில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று பேசப்பட்டு வருகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெய்ராம் , அஜ்மல், வைபவ், லைலா, ஸ்னேஹா, யோகிபாபு என மிகப்பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் என அனைவரும் படத்தை promote செய்யும் வேலையி தீவிரமாக இறங்கியுள்ளனர்.


படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் உள்ள சஸ்பென்ஸ் குறித்தும், நடிகர்கள் குறித்தும் சிலாகித்து இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

நான் மோகன் சாரோட மிகப்பெரிய ரசிகன். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை வில்லன் ஆ fix பண்ணேன். மோகன் சாருக்கு கதை பிடிக்கலைன்னா அவர் நடிக்கமாட்டார். இந்த ரோலா சொன்ன உடன் அவர் சூப்பர் னு சொன்னார்.

நடிகை லைலாவுக்கு இந்த படத்தில சின்ன ரோல்தான், ஆனாலும் அவங்க வந்து எங்களுக்காக நடித்து கொடுத்தார்கள்.

அடுத்தாக, ஸ்னேஹா மேடம், அவங்களுக்கு இந்த ரோல் பத்தி சொன்னபோது இது நானா பண்ணப்போறன்னு ஆச்சரியமா கேட்டாங்க. அவங்களுக்கும் ரொம்ப சந்தோசம். அவங்க ஒரு பெஸ்ட் performer .

பிரேம்ஜிக்கும் இந்த படத்தில ஒரு ரோல் இருக்கு. இப்போ அவன் ரொம்ப மாறிட்டான். கல்யாணம் ஆயிடுச்சு, பொறுப்புள்ள பையனா மாறிட்டான். இப்படி அவனை பாக்குறதுக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு.

விஜய் சார் நீயும், யுவனும் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் பண்ணனும் னு சொன்னார். யுவன் நல்லா பண்ணிருக்கார். பாட்டுக்கெல்லாம் தியேட்டர்ல கண்டிப்பா டான்ஸ் ஆடுவாங்க.

பவதாரிணி குரலை இந்த படத்துல ஒரு பாட்டுக்கு கொண்டு வந்திருக்கோம். தொழில்நுட்பத்துக்குத்தான் நன்றி சொல்லணும். சின்ன சின்ன கண்கள் பாட்டு நிச்சயமா ஒரு எவெர்க்ரீன் பாடலா இருக்கப்போகுது . விஜய் சாரும் சேர்ந்து பாடி இருக்கிறார் அப்படிங்குறது எங்க குடும்பத்துக்கே ஒரு சந்தோசம்.

நாங்க நினைத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு தயாரிப்பு நிறுவனமான AGS க்கு நன்றி.

இவ்வாறு GOAT திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

More News

மாஸ் நடிகரின் படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்த சிம்பு.. வேற லெவல் தகவல்..!

மாஸ் நடிகரின் படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கூலி' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. 'தளபதி' படத்துடன் கனெக்சனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்

தமிழ் திரையுலகிலும் தவறு இருக்கிறது: நடிகைகளுக்கு பாலியல் கொடுமை குறித்து ராதிகா..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நிலையில் தமிழ் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல்

'விசில் போடு' பாடல் 'கோட்' படத்தில் இல்லையா? வெங்கட் பிரபு கூறிய ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் 'விசில் போடு' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது

தமிழ்நாட்டில் 'கோட்' படத்தின் முதல் காட்சி எத்தனை மணிக்கு? விறுவிறுப்பான முன்பதிவு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு என்பது குறித்த