பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் GOAT, மனம் திறக்கும் வெங்கட் பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே GOAT திரைப்படம் குறித்த hype அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்களில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று பேசப்பட்டு வருகிறது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெய்ராம் , அஜ்மல், வைபவ், லைலா, ஸ்னேஹா, யோகிபாபு என மிகப்பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் என அனைவரும் படத்தை promote செய்யும் வேலையி தீவிரமாக இறங்கியுள்ளனர்.
படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் உள்ள சஸ்பென்ஸ் குறித்தும், நடிகர்கள் குறித்தும் சிலாகித்து இந்த பேட்டியில் பேசியுள்ளார்.
" நான் மோகன் சாரோட மிகப்பெரிய ரசிகன். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை வில்லன் ஆ fix பண்ணேன். மோகன் சாருக்கு கதை பிடிக்கலைன்னா அவர் நடிக்கமாட்டார். இந்த ரோலா சொன்ன உடன் அவர் சூப்பர் னு சொன்னார்.
நடிகை லைலாவுக்கு இந்த படத்தில சின்ன ரோல்தான், ஆனாலும் அவங்க வந்து எங்களுக்காக நடித்து கொடுத்தார்கள்.
அடுத்தாக, ஸ்னேஹா மேடம், அவங்களுக்கு இந்த ரோல் பத்தி சொன்னபோது இது நானா பண்ணப்போறன்னு ஆச்சரியமா கேட்டாங்க. அவங்களுக்கும் ரொம்ப சந்தோசம். அவங்க ஒரு பெஸ்ட் performer .
பிரேம்ஜிக்கும் இந்த படத்தில ஒரு ரோல் இருக்கு. இப்போ அவன் ரொம்ப மாறிட்டான். கல்யாணம் ஆயிடுச்சு, பொறுப்புள்ள பையனா மாறிட்டான். இப்படி அவனை பாக்குறதுக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு.
விஜய் சார் " நீயும், யுவனும் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் பண்ணனும்" னு சொன்னார். யுவன் நல்லா பண்ணிருக்கார். பாட்டுக்கெல்லாம் தியேட்டர்ல கண்டிப்பா டான்ஸ் ஆடுவாங்க.
பவதாரிணி குரலை இந்த படத்துல ஒரு பாட்டுக்கு கொண்டு வந்திருக்கோம். தொழில்நுட்பத்துக்குத்தான் நன்றி சொல்லணும். சின்ன சின்ன கண்கள் பாட்டு நிச்சயமா ஒரு எவெர்க்ரீன் பாடலா இருக்கப்போகுது . விஜய் சாரும் சேர்ந்து பாடி இருக்கிறார் அப்படிங்குறது எங்க குடும்பத்துக்கே ஒரு சந்தோசம்.
நாங்க நினைத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு தயாரிப்பு நிறுவனமான AGS க்கு நன்றி.
இவ்வாறு GOAT திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments