உலக அளவில் டுவிட்டர் செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர்

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

2018ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது. இதன்படி டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற ஆண்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 10வது இடத்தில் உள்ளார். உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே தமிழர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பட்டியலில் 8வது இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முதல் பத்து இடங்களில் அமிதாப் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் டெய்லர் சுவிப்ட், கேட்டி பெர்ரி, கிம் கர்தர்ஷன், டெமி லோவோட்டோ, எலன், செலீனா கோம்ஸ், ஷகிரா, ஜெனிபர் லோபஸ், ரிஹான்னா, லேடி காகா ஆகியோர் உள்ளனர்,.

 

More News

மீண்டும் லைகாவுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

அரசியல்வாதிகள் தான் உண்மையில் தேசிய பேரிடர்கள்: கமல்ஹாசன்

கடந்த பிப்ரவரி மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும், கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், அதிமுக அமைச்சர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டே வந்தது

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த இணையதளத்தை அசைக்க முடியவில்லை

என்னை நம்பாக கெட்டவங்க நிறைய பேரு : 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலுக்கு மூளையில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜூ

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலை விட அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் கொடூரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.