'காலா'வின் கலக்கலான வசனங்கள்
- IndiaGlitz, [Thursday,June 07 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ரஜினியின் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம், அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் மக்களுக்காக போராடும் கதாபாத்திரம், சரியான நடிகர்-நடிகையர் தேர்வு, புரட்சிகரமான கருத்துக்களுடன் கூடிய பாடல்கள் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்களாக பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்த படத்தின் வசனங்கள் ஷார்ப்பாகவும், எளிமையான வார்த்தைகளும் புரட்சி கருத்துக்களை கூறும் வகையில் இருப்பதால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற சில கலக்கலான வசனங்கள் இதோ:
* எனக்கு உங்க உதவி வேணும். நல்லது நடந்தா எப்பவும் நான் கூட இருப்பேன்
* என்னால இதை ஏத்துக்கவே முடியல.நீ எனக்கு இல்லைங்கறதை.. காலம் மறுபடி நம்மை சந்திக்க வச்சு கொடும பண்ணுது (ஹூமாவிடம் ரஜினி பேசும் வசனம்)
* அரசாங்கம் எதுக்கு இருக்கு? கடன்தான் இருக்கு, கஜானா காலி னு என்கிட்ட சொல்லாதீங்க
* பணக்காரன் என்னைக்கு ஏழை நலன் பற்றி சிந்திச்சிருக்கான்?
* பாக்க நல்லவர் மாதிரிதான் இருக்காரு. வெள்ளயும் சொள்ளையுமா இருந்தா போதுமா? அவன் நல்லவனா? (நானா படேகரை பார்த்து ரஜினி குடும்பத்து பெண்கள் பேசுவது)
* இது காலா கிலா. என்னோட கோட்டை, இங்க இருந்து ஒரு பிடி மண் கூட எடுத்துட்டுப்போக முடியாது (இடைவேளை மாஸ் வசனம்)
* நான் உன்னை இன்னும் போகச் சொல்லலையே? என் இடத்துக்கு வரும்போது பர்மிஷன் கேட்காம வந்துட்ட, ஆனா திரும்பிப் போகனும்னா என் அனுமதி வாங்கிட்டுதான் போகனும் (மிகப்பெரிய கைதட்டல் பெற்ற வசனம்)
*செக்கு அளவு தங்கம் இருந்தாலும் செதுக்கி தின்னுட்டே இருந்தா மிச்சம் எப்டி இருக்கும்? (சமுத்திரக்கனி பேசும் வசனம்)
* உற்றார் ,உறவினர் கூட இருப்பதுதான் வாழ்க்கை ,அவங்களை விட்டுட்டு தனியா போய் என்ன சாதிக்கப்போறே? (தனியாக போகப்போவதாக மகன் கூறியதும் அவருக்கு ரஜினி கூறும் அறிவுரை)
* கை குடுத்துப்பழகுங்க.அதுதான் சம உரிமை, கால்ல விழ வைக்க நினைக்காதீங்க (நானா படேகரிடம் ஹூமா பேசும் வசனம்)
* முடிஞ்சா என் முதுகுல குத்திக்கோ (நானா படேகரிடம் ரஜினி பேசும் வசனம்)
* அதென்ன நடுராத்திரில வந்து அரெஸ்ட் பண்றது? (கலைஞர் கைதை நினைவுபடுத்தும் வசனம்)