பள்ளியில் புகுந்து ஆசிரியையை கொலை செய்த வாலிபர் தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா என்ற 23 வயது ஆசிரியையை வாலிபர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து சர்மாரியாக வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.
இந்த நிலையில் ராஜசேகர் என்ற வாலிபர் அடிக்கடி ரம்யாவை ஒருதலையாக காதலித்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், இந்த ஒருதலை காதலை ரம்யா மறுத்ததால் அந்த ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து ரம்யாவை ராஜசேகர் வெட்டி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது
இந்த நிலையில் கொலையாளி ராஜசேகரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஆசிரியை ரம்யாவை வெட்டிக்கொலை செய்த ராஜசேகர், உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையால் குளம் முந்திரிக்காட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. போலீஸ் தன்னை தேடி வருவதால் பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒருதலைக்காதலால் இரண்டு உயிர்கள் பலியாகியிருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments